ஏழை மக்கள் அனைவருக்கும் அடிப்படை வருமானம்: ராகுல் காந்தி அதிரடி

  Newstm Desk   | Last Modified : 29 Jan, 2019 04:52 am
rahul-gandhi-promises-universal-basic-income-to-poor-people

வரும் 2019 நாடாளுமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், நாட்டிலுள்ள ஏழை மக்கள் அனைவருக்கும் அடிப்படை வருமானமாக, வாழ்வதற்கு ஏற்ற தொகை, வழங்கப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு, நாட்டின் அனைத்து கட்சிகளும் தயாராகி வரும் நிலையில், ராகுல்காந்தி இன்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் விவாதிக்கப்பட்டு வரும் 'அடிப்படை வருமானம்', என்ற திட்டத்தை ஏழை மக்களுக்காக இந்தியாவில் கொண்டு வர உள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து ராய்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் பேசிய போது "லட்சக்கணக்கான நமது சகோதர சகோதரிகள் வறுமையில் வாடிக் கொண்டிருக்கும் போது, புதிய இந்தியாவை நம்மால் உருவாக்க முடியாது. 2019 தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், நாட்டில் உள்ள ஏழை மக்கள் அனைவருக்கும் அடிப்படை வருமானம் வழங்கப்படும். இதனால் ஏழை மக்கள் மத்தியில் வறுமையையும், பசியையும் நம்மால் போக்க முடியும்" என்று அவர் கூறினார்.

பல்வேறு ஐரோப்பிய நாடுகளில், பொதுமக்கள் அனைவருக்கும், வாழ்வதற்கு ஏற்ற ஒரு தொகையை, அடிப்படை சம்பளமாக வழங்குவது குறித்து பல ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close