பெண் வேடமிட்டு கொலை: மைனர் குற்றவாளி வாக்குமூலம்

  Newstm Desk   | Last Modified : 30 Jan, 2019 12:55 pm
minor-accused-explains-about-the-crime

டில்லியில், தனியாக வசித்து வந்த வயதான தம்பதியை கொலை செய்த சிறுவன், தன் தாயின் திட்டப்படி, பெண் வேடமிட்டு சென்றதாக வாக்குமூலம் அளித்துள்ளான்.

டில்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த, வீரேந்திரா குமார், 77 மற்றும் அவரது மனைவி சரளா, 72 படுகொலை செய்யப்பட்ட வழக்கில், போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள சிறுவன், பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளான். 

அதில் அவன் கூறியிருப்பதாவது: ‛‛வீரேந்திராவின் வீட்டில் என் தாய் வேலை செய்து வந்தார். அவருடன் அந்த வீட்டிற்குள் சென்றால், யாருக்கும் சந்தேகம் வராது என திட்டமிட்டோம். என் தாய் போட்ட திட்டப்படி, நான் பெண் வேடமிட்டு, அவர்களின் வீட்டிற்குள் சென்றேன். 

கொலை செய்து முடித்ததும், அங்கிருந்த பணம் மற்றும் நகைகளை ஒரு ட்ராவல் பேக்கில் எடுத்துக்கொண்டு, கார்ப்பரேட் கம்பெனியில் வேலை செய்பவன் போல் உடையணிந்து, அடுத்த நாள் விடிகாலை அங்கிருந்து வெளியேறினேன். 

வீரேந்திரா மற்றும் அவரின் மனைவியை கொலை செய்துவிட்டு, அன்று இரவு முழுவதும் அந்த பிணங்களுடனேயே தங்கியிருந்தேன். இது  அனைத்தும் அம்மா போட்ட திட்டப்படியே நடந்தது’’ என அவன் கூறினான்.

18 வயது கூட நிரம்பாத சிறுவன், இவ்வளவு கச்சிதமாக கொலை செய்து, அதை மறைக்கும் வேலைகளிலும் ஈடுபட்டுள்ளான். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close