காந்தியடிகள் நினைவு தினம் - குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி

  Newstm Desk   | Last Modified : 30 Jan, 2019 01:01 pm
leaders-including-president-pm-paid-tribute-to-mahatma-gandhi

தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் நினைவு தினத்தையொட்டி, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத்தலைவர் வெங்கய்யா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தியடிகளின் நினைவிடத்தில், ராம்நாத் கோவிந்த் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதேபோன்று வெங்கய்யா நாயுடு, மோடி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். முன்னதாக, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரும் காந்தியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். 

இதற்கிடையே, டுவிட்டரில் ராம்நாத் கோவிந்த் வெளியிட்ட பதிவில், “தியாகிகள் தினமான இன்று, மகாத்மா காந்தி உள்பட விடுதலைக்காக போராடிய அனைத்து தியாகிகளையும் நாம் நினைவுகூர வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார். காந்தியின் கொள்கைகள் மற்றும் சிந்தனைகளைக்கு நம்மை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்று வெங்கய்யா நாயுடு கூறியுள்ளார். பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், மகாத்மாவின் வழியை நாம் பின்பற்ற வேண்டும் என்றும், விடுதலைக்காக போராடிய தியாகிகள் அனைவருக்கும் நாடு என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close