அனைத்தையும் துறந்து இன்று சன்னியாசம் பெறும் 150 பெண்கள் 

  Newstm Desk   | Last Modified : 30 Jan, 2019 02:30 pm
150-womens-are-going-to-get-sanyas

உத்தர பிரதேச மாநிலம் அலகாபாத்தில் நடந்து வரும் கும்பமேளாவில், ஜூனா அகாடா சார்பில், இன்று, 150 பெண்கள், அனைத்தையும் துறந்து, சன்னியாசம் பெற்று, நாகா சாதுக்களாக மாற உள்ளனர்.

உத்தர பிரேதசத்தில் நடந்து வரும் கும்பமேளாவில், பல்வேறு அகாடாக்கள் சார்பில் பல ஆன்மிக நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், ஜூனா அகாடா சார்பில் இன்று நடக்கும் வேள்வியில், ஏற்கனவே துறவறத்திற்கு தயாராக உள்ள, 150 பெண்கள் சன்னியாச தீட்சை பெற்று, நாகா பாபாக்களாக மாற உள்ளனர்.
 

இது குறித்து, நாகா பாபாக்கள் கூறியதாவது: ‛‛ பெண்கள் நாகா பாபா என்ற நிலையை அடைய, பெண்கள், 6 - 12 ஆண்டுகள் பிரம்மச்சரியம் கடைபிடிக்க வேண்டும். அதாவது, இல்லறத்தில் இருந்தபடியே, பிரம்மச்சரிய வாழ்க்கை வாழ வேண்டும். 

சன்னியாசம் பெற, தன் குருவிடம் முன் அனுமதி பெற வேண்டும். அவர் கூறும் கடினமான வழிமுறைகளை பின்பற்றி, அதன் பின், கும்பமேளாவின் போது,  சன்னியாச தீட்சை பெற வேண்டும்.

இன்று, 150 பெண்களுக்கு சன்னியாச தீட்சை வழங்கப்பட உள்ளது. அவர்கள், தங்கள் தலையை மொட்டையடித்து, வழக்கமான ஆடைக்கு பதிலாக, வெறும் மஞ்சள் புடவையை சுற்றிக் கொள்ள வேண்டும். 

அதன் பின், திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி, தனக்கு தான பிண்டம் வைத்து, திவசம் செய்ய வேண்டும். 14 தலைமுறைகளை சேர்ந்த தனது முன்னோர்களுக்கும் திவசம் செய்ய வேண்டும்.

அதன் பின், கையில் தண்டம் ஏந்தி, பாசம், பந்தம், இன்பம், துக்கம், விருப்பு, வெறுப்பு, கோபம் உள்ளிட்ட அனைத்தையும் துறந்து, சன்னியாசிகளாக வாழ, தீட்சை பெறுவர். அதன் பின், காசியிலோ, இமயமலை பகுதியிலோ நாடோடிகளாக சுற்றித் திரிவர். 

பசி, தாகம், துாக்கம்,ஓய்வு இவற்றை துறந்த இவர்களை, அம்மா என்றே அனைவரும் அழைப்பர். இந்த அற்புத நிகழ்வு இன்று நடக்கவுள்ளது. 150 பெண்கள் சன்னியாச தீட்சை பெற்று, நாகா பாபாவாக மாற உள்ளனர்’’ என அவர் கூறினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close