எஜமானனின் உயிரை காப்பாற்றிய புத்திசாலி நாய்! 

  Newstm Desk   | Last Modified : 30 Jan, 2019 04:02 pm
doctor-suffers-cardiac-arrest-while-alone-at-home-saved-by-stray-dog

மாரடைப்பால் அவதியுற்ற தமது எஜமானனின் உயிரை, அவர் வளர்த்து வரும் செல்லப் பிராணியான நாய் சமயோஜிதமாக செயல்பட்டு காப்பாற்றிய நெகிழ்ச்சியான சம்பவம் புணே நகரில் நடந்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம், புணே நகரில் குடும்பத்துடன் வசித்து வருபவர் ரமேஷ் சன்ஷெட்டி. மருத்துவரான இவர், கடந்த 23-ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது இவர் செல்லமாக வளர்த்து வரும் நாயான ப்ரவ்னி மட்டும் உடன் இருந்துள்ளது.

ரமேஷ் சன்ஷெட்டிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் செய்யதவறியாது  உயிருக்கு அவர் போராடிக் கொண்டிருந்தார். இதனை கவனித்த ப்ரவ்னி, உடனே குரைத்து சப்தம் எழுப்பியது.

நாய் தொடர்ந்து குரைத்து கொண்டிருப்பதை கேட்ட அக்கம் பக்கத்தினர் அதனருகே வந்து பார்த்தபோது தான், அதன் எஜமானரான 65 வயது ரமேஷ் சன்ஷெட்டி மாரடைப்பால் அவதியுற்று வருவதை அவர்கள் கவனித்தனர். உடனே கதவை உடைத்து வீட்டுக்குள் நுழைந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு  மருத்துவமனையில் சேர்த்தனர்.

சமயோஜிதமாக செயல்பட்டு, தமது எஜமானின் உயிரை காப்பாற்றி தன்  நன்றியை நாய் தெரிவித்துள்ளதாக அக்கம் பக்கத்தினர் ப்ரவ்னியை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

ப்ரவ்னியை ரமேஷ், 16 ஆண்டுகளுக்கு முன்பு தெருவில் கண்டெடுத்து வளர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close