பிப்ரவரி 1ம் தேதி இடைக்கால நிதிநிலை மட்டுமே தாக்கல்- பியூஷ் கோயல் தகவல்

  ஸ்ரீதர்   | Last Modified : 30 Jan, 2019 05:25 pm
modi-government-to-table-an-interim-budget-on-febraury-1

பிப்வரவரி 1ம் தேதி இடைக்கால நிதிநிலை அறிக்கை மட்டுமே தாக்கல் செய்யப்படும் என மத்திய நிதி அமைச்சர் பொறுப்பு வகிக்கும், பியூஷ் கோயல் தெரிவித்திருக்கிறார்.

நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறும் ஆண்டுகளில், அப்போது, ஆட்சியிலிருக்கும் அரசு, தனது கடைசி 5 மாத ஆட்சிக்காலத்திற்கான, இடைக்கால பட்ஜெட்டை மட்டுமே தாக்கல் செய்யும். 

அதில், எந்த புதிய திட்டங்களோ, புதிய அறிவிப்புகளோ இடம்பெறாது. இந்தச்சூழலில், தற்போதைய மத்திய பாஜக அரசு, முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யப்போவதாக செய்திகள் வெளியாகின.

இதற்கு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளிடம் இருந்து எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து, தலைநகர் டெல்லியில், மத்திய நிதி அமைச்சர் பொறுப்பு வகிக்கும் பியூஷ் கோயல் செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார்.

முழு பட்ஜெட் தாக்கலாக உள்ளதாக வெளியான செய்திகளை திட்டவட்டமாக மறுத்த பியூஷ் கோயல், பிப்ரவரி ஒன்றாம் தேதி, எப்போதும் போல, இடைக்கால நிதிநிலை மட்டுமே தாக்கல் செய்யப்படும் என்றார்.
newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close