வங்கி கணக்கு துவங்கியதில் சாதனை: ஜனாதிபதி பெருமிதம் 

  Newstm Desk   | Last Modified : 31 Jan, 2019 12:44 pm
president-speech-parliament-part-2

பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடரில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மேலும் பேசியதாவது:

‛‛சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், நாடு முழுவதும், 9 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. 

ஜன் தன் திட்டத்தின் கீழ், 34 கோடி பேருக்கு புதிதாக வங்கிக் கணக்கு துவக்கப்பட்டுள்ளது. 2014 - 17 காலகட்டத்தில்,  உலக அளவில் மொத்தம் துவங்கப்பட்ட வங்கி கணக்குகளில், இது, 55 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. 

அரசு மானிய தொகை பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தும் திட்டத்தின் கீழ், நான்கு ஆண்டுகளில், 6 லட்சம் கோடி ரூபாய் பணப் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், பயனாளிகள் நேரடியாக பலன் அடைந்ததுடன், தவறான வழியில் சென்று கொண்டிருந்த, அரசுப் பணம், 1.2 லட்சம் கோடி ரூபாய் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. 

கறுப்பு பணத்தை ஒழிக்க இந்த அரசு மிகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக்க, இந்த அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. அதற்காக பல திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. 

மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தவும், ஆராய்ச்சி படிப்பை மேம்படுத்தவும், புதிய ஐ.ஐ.டி.,க்கள் மற்றும் ஐ.ஐ.எம்.,க்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 

சாலைகள், போக்குவரத்து வசதிகள், மருத்துவ வசதிகள், கல்வி நிறுவனங்கள், மக்கள் குடியிருப்புகள் போன்றவற்றை அமைப்பதில், இந்த அரசு திறம்பட செயலாற்றி வந்துள்ளது. 

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலத்தில் செயல்படுத்தப்பட்ட பல திட்டங்கள், நாட்டு மக்களுக்கு நன்மை பயத்தன. அதை பின்பற்றி, இந்த அரசும் பல மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இந்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்காெண்டுள்ளது. 

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யவே ரபேல் போர் விமானம் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலை நம் நாட்டு ராணுவம் மிகத் திறம்பட கையாண்டு அவற்றை முறியடித்துள்ளது. 

மொத்தத்தில், இந்த அரசு, நாட்டு மக்களின் நலன், பாதுகாப்பு, ஏழைகள் நலனில் அக்கறை, கல்வி, சுகாதாரம், பெண்கள் நலன் மற்றும் முன்னேற்றம், உள்கட்டமைப்பு வசதி உள்ளிட்ட பல அம்சங்களில் கவனம் செலுத்தும் வகையில் செயலாற்றி வருகிறது’’ இவ்வாறு அவர் பேசினார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close