ராஜினாமாவை ஏற்றுக்கொள்ள முடியாது: அலோக் வர்மாவுக்கு மத்திய அரசு பதிலடி

  Newstm Desk   | Last Modified : 31 Jan, 2019 09:54 pm
alok-verma-s-resignation-not-accepted-center

முன்னாள் சிபிஐ தலைவர் அலோக் வர்மா மீது நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும், அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் மத்திய அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

சிபிஐ தலைவர் அலோக் வர்மாவுக்கும், செயல் தலைவர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே ஏற்பட்ட சர்ச்சையை தொடர்ந்து, இருவரையும் கட்டாய விடுப்பில் அனுப்பி மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்கு எதிராக அவர் தொடுத்த வழக்கில், பிரதமர் மோடி தலைமையிலான உயர்மட்ட குழு இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அவரை சிபிஐ தலைவர் பதவியில் இருந்து நீக்கி, தீயணைப்புத்துறையின் இயக்குனராக உயர்மட்ட குழு நியமித்தது. ஆனால் இந்த நடவடிக்கைக்கு வர்மா எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். தனது பதவியை ராஜினாமா செய்தார். இன்றுடன் அவர் ஓய்வு பெறும் நிலையில், அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொள்ள முடியாது என மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தீயணைப்புத் துறை இயக்குநராக அவர் பதவியேற்காதது குறித்து நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close