பணிபுரியும் பெண்களுக்கு 26 வாரம் மகப்பேறு விடுப்பு

  ஸ்ரீதர்   | Last Modified : 01 Feb, 2019 01:33 pm
budget-individuals-with-gross-income-up-to-6-5-lakh-rupees-will-not-need-to-pay-any-tax

பணிபுரியும் பெண்களுக்கு 26 வாரம் மகப்பேறு விடுப்பு அளிக்கப்படும் என மத்திய இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக அரசு உஜ்வாலா திட்டத்தின்மூலம், 6 கோடி பேருக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படும். வரும் ஆண்டில் கூடுதலாக 8 கோடி இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படும். முத்ரா திட்டத்தின் கீழ் கடன் பெற்றவர்களில் 70 சதவீத பேர் பெண்கள் ஆவர். முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.7.23 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. 

மாதம் ரூ.15ஆயிரத்திற்கு கீழ் ஊதியம் பெறுவோருக்கு புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. பணிபுரியும் பெண்களுக்கான மகப்பேறு விடுப்பு 26 வாரம் அளிக்கப்படும். நெடுஞ்சாலைகளை அமைப்பதில் உலகிலேயே மிகவேகமான நாடு இந்தியா என்ற பெருமையை பெற்றுள்ளது. சராசரியாக தினமும் 27 கிமீ தொலைவுக்கு நெடுஞ்சாலை அமைக்கப்படுகிறது.  சூரிய மின்சக்தி உற்பத்தி 10 மடங்கு அதிகரித்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களுக்கும் ரெயில் போக்குவரத்து நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மொபைல் டேட்டா பயன்பாடு 15 மடங்கு அதிகரித்துள்ளது. விமானத்துறையில் வேகமான வளர்ச்சி இருப்பதால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. செல்போன் உதிரிபாக உற்பத்தி அதிகரித்தன் மூலம் வேலைவாய்ப்பும் உயர்ந்துள்ளது. ரூ.1 கோடி வரையிலான கடன்களுக்கு 3 சதவீத வட்டி கழிவு வழங்கப்படும். 

நாடு முழுவதும் ஆளில்லா ரெயில்வே கிராஸிங்குகள் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளன.  கடந்த 5 ஆண்டுகளில் 34 கோடி ஜன்தன் வங்கிக்கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு லட்சம் கிராமங்கள் டிஜிட்டல் மயமாக்கப்படும். உள்நாடு வர்த்தகம் மற்றும் சேவைகளுக்கு முன்னுரிமை அளிக்க மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது என்று நிதி அமைச்சர் பொறுப்பு வகிக்கும் பியூஷ் கோயல் பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close