மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து 6 முறை நிலநடுக்கம்; பீதியில் மக்கள்!

  Newstm Desk   | Last Modified : 02 Feb, 2019 08:49 am
maharashtra-two-year-old-trips-and-dies-as-tremor-hits-talasari

மகாராஷ்டிர மாநிலம் பல்கர் நகரில் அடுத்தடுத்து 6 முறை நில அதிர்வு உணரப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். மேலும் இந்த நில அதிர்வால் 2 வயது குழந்தை பலியாகியுள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலம் பல்கர் மாவட்டத்தில் உள்ள தலசாரி தாலுகாவில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் 4.1 என்ற ரிக்டர் அளவில் நில அதிர்வு உணரப்பட்டது அதைத்தொடர்ந்து சுற்றியுள்ள பகுதிகளில் அடுத்தடுத்து 6 முறை நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 3.5, 3.6, 4.1 உள்ளிட்ட அளவுகளில் பதிவாகியுள்ளது. 

மேலும் நில அதிர்வினால் ஒரு சுவர் இடிந்து விழுந்ததில் 2 வயது சிறுமி பலியானதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close