சிறுமியுடன் காட்டுக்குள் 23 நாள் கும்மாளம்: போலீஸ் வலையில் சிக்கிய காமுகன்

  Newstm Desk   | Last Modified : 02 Feb, 2019 01:24 pm
kerala-youth-who-eloped-and-lived-with-minor-girl-in-dense-forest-for-23-days

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் சிறுமியுடன் மாயமான இளைஞர், அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று 3 வாரங்கள் வாழ்ந்திருக்கிறார். அவர்களை தனிப்படை அமைத்து தேடிய காவல்துறை, பெரும் போராட்டத்துக்கு பின், சிறுமியை மீட்டதுடன் அந்த இளைஞரை கைது செய்துள்ளது.

இடுக்கி மாவட்டம் குமிலி கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த ஜனவரி 6ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை காலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற பின் திரும்பிவரவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோருக்கு சிறுமியின் டைரி கண்ணில் தென்பட்டது. அதில் ஒரு செல்போன் நம்பரும் இருந்திருக்கிறது. இந்நிலையில், சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். தங்களுடைய தோட்டத்தில் பாக்கு கொட்டைகளை பொறுக்குவதற்காக பணியமர்த்தப்பட்ட ஜார்ஜ் என்ற அப்புகுட்டன் மீது சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

இதைக் கேட்ட காவல்துறையினர், அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி அடைந்தனர். காரணம், 21 வயதே ஆன அப்புக்குட்டன் கடும் குற்றப்பின்னணி உடையவர். வேறொரு சிறுமியை காதல் வலையில் வீழ்த்தி, கர்ப்பம் அடையச் செய்ததாக அவர் மீது ஏற்கனவே போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு நிலுவையில் உள்ளது. அத்துடன் திருட்டு வழக்கு ஒன்றிலும் சம்பந்தப்பட்டுள்ளார். இதனால், உஷாரடைந்த காவல்துறை, அப்புக்குட்டனை பிடிப்பதற்காக 72 பேர் கொண்ட தனிப்படையை அமைத்திருக்கிறது.

தமிழக எல்லையை ஒட்டிய அடூர்மலா வனப்பகுதிக்கு அருகேயுள்ள ஊரில் அப்புக்குட்டனின் செல்போன் சிக்னல் கடைசியாக பதிவாகியிருந்தது. அதை வைத்து, அப்பகுதியில் தேடியபோது அப்புக்குட்டனும், சிறுமியும் சிக்கவில்லை. இதனால், வனப்பகுதிக்குள் தேடுதல் வேட்டையை தொடங்கினர். பல நாள்கள் ஒரு பலனும் கிடைக்கவில்லை. இந்நிலையில், அப்புக்குட்டனும், சிறுமியும் அவ்வபோது காவல்துறையின் கண்ணில் தென்பட்டிருக்கின்றனர். ஆனால், அவர்களை பிடிப்பதற்காக நெருங்கும் சமயத்தில் மாயமாகியிருக்கின்றனர். இது தொடர்கதையாக இருந்திருக்கிறது.

இறுதியாக, கடந்த 29ம் தேதி, அதாவது செவ்வாய்க்கிழமை அன்று, அப்புக்குட்டனும், சிறுமியும் கைகளில் பழக் கொத்துகளை எடுத்துக் கொண்டு, சந்தையில் விற்பதற்காக, எழவீளபூச்சிரா என்னும் ஊர் பகுதிக்குள் நுழைந்திருக்கின்றனர். அப்போது, காவலர்களை கண்டதும் தனிதனியாக ஓட்டம் பிடித்தனர். வீடு ஒன்றில் தஞ்சமடைந்த சிறுமியை, அவ்வீட்டார் அளித்த தகவலின் பேரில் காவல்துறையினர் மீட்டனர். பிறகு அப்புக்குட்டனையும் தேடிப்பிடித்து கைது செய்தனர்.

சொந்த ஊரில் மாயமானதில் இருந்து 23 நாள்கள் கழித்து சிறுமியும், அப்புக்குட்டனும் பிடிபட்டுள்ளனர்.  அதாவது, இந்த 3 வாரங்கள் காட்டுக்குள் அவர்கள் வாழ்ந்தது மிகுந்த வியப்பளிப்பதாக கூறுகிறது காவல்துறை. காட்டுக்குள் கிடைத்த கிழங்கு, பழ வகைகள், தேங்காய் உள்ளிட்டவற்றை தின்று அவர்கள் வாழ்க்கை நடத்தியிருக்கின்றனர். குறிப்பாக, மலைக்குன்றுகள், மிகப் பெரிய மரங்களுக்கு இடையே தங்குவதை அவர்கள் வாடிக்கையாக கொண்டிருந்ததாகவும் காவல்துறை தெரிவிக்கிறது. அப்புக்குட்டனுக்கு காடுகளை பற்றி நிறைய விவரங்கள் என்பதும், மரம் ஏறுவது கை வந்த கலை என்பதும் தலைமறைவு வாழ்க்கைக்கு கை கொடுத்திருக்கிறது.

இதற்கிடையே, சிறுமியின் பெற்றோர் கேரள உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தனர். இதையடுத்து, கடந்த 30ம் தேதி சிறுமியை நீதிமன்றத்தில் காவல்துறை ஆஜர்படுத்தியது. பின்னர், அவர் மகளிர் காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில், அப்புக்குட்டன் மீது மீண்டும் ஒருமுறை போக்ஸோ சட்டம் பாய்ந்திருக்கிறது.
newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close