திருப்பதியில் பிரசித்தி பெற்ற கோயிலில் 3 தங்க கிரீடம் திருட்டு

  Newstm Desk   | Last Modified : 03 Feb, 2019 01:20 pm
three-golden-crowns-were-stolen-from-andhra-temple

திருப்பதி நகரில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றான கோவிந்தராஜசுவாமி கோயிலில் இருந்து 3 தங்க கிரீடங்கள் திருடப்பட்டுள்ளன. அவற்றின் மொத்த எடை 1.35 கிலோ ஆகும்.

ஆந்திர ஏழுமலையான் கோயில் உலகப் புகழ் பெற்ற கோயில் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதைப்போலவே பிரசித்தி பெற்ற வேறுசில கோயில்களும் திருப்பதியில் உள்ளன. குறிப்பாக, கோவிந்தராகசுவாமி கோயிலானது 12ம் நூற்றாண்டுக்கு முந்தைய காலகட்டத்தில் கட்டப்பட்ட மிக தொன்மையான கோயிலாகும். அங்கு மலயப்பா, ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய 3 தெய்வங்கள் உள்ளன. 

இதில், மலையப்பருக்கு 528 கிராம் எடையுள்ள கிரீடமும், ஸ்ரீதேவிக்கு 408 கிராம் எடையுள்ள கிரீடமும், பூதேவிக்கு 415 கிராம் எடையுள்ள கிரீடமும் அணிவிக்கப்பட்டிருந்தது. இந்த மூன்று கிரீடங்களிலும் விலையுயர்ந்த கற்களும் பொறிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், நேற்று மாலையில் கிரீடங்கள் களவு போயிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, கோயில் கண்காணிப்பாளர் அளித்த புகாரின் அடிப்படையில், சிசிடிவி பதிவுகளைக் கொண்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close