காஷ்மீரில் பிரதமர் மோடி: பாதுகாப்பு கருதி ஸ்ரீநகரில் இணைய சேவை முடக்கம்!

  Newstm Desk   | Last Modified : 03 Feb, 2019 01:38 pm
internet-services-have-been-suspended-in-srinagar-ahead-of-modi-s-visit

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் லே நகரில் புதிய விமான நிலையத்துக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார். மேலும், சுமார் 44 ஆயிரம் கோடி செலவிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

காஷ்மீர் மாநிலம் லே நகருக்கு இன்று காலை வந்த பிரதமர் மோடி அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடினார். பின்னர் லே நகரில் அமையவுள்ள ஏர்போர்ட் ஒன்றிற்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, லடாக் பல்கலைக்கழகத்திற்கு அடிக்கல் நாட்டிய அவர், லே நகரில் நடைபெறும் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசி வருகிறார். 

அவர் பேசும் போது, சுற்றுலாவை மேலும் மேம்படுத்த டெல்லியிலிருந்து லே நகரை இணைக்கும் ரயில் பாதை திட்டம் முடியும் நிலைக்கு வந்துள்ளது. அந்த பணி முழுவதுமாக முடிந்த பிறகு, டெல்லிக்கும் லே நகருக்கும் இடையேயான தொலைவு குறையும். 

லடாக் மலை வளர்ச்சிக்கான கவுன்சில் குறித்து சட்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. மேலும், லே நகருக்கு அனுமதிக்கும் நாட்களின் எண்ணிக்கை மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்கப்படுகிறது. 

மேலும் பாதுகாப்பு கருதி ஸ்ரீநகர் பகுதியில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பிரதமர் மோடி நிகழ்ச்சிகள் முடிந்த பிறகே அவர் பேசிய முழு தகவல்கள் தெரிய வரும். 

தொடர்ந்து பிரதமர் மோடி ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் இரண்டு எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close