விவசாயக்கடனை கருவியாக பயன்படுத்தும் காங்கிரஸ்: மோடி குற்றச்சாட்டு

  Newstm Desk   | Last Modified : 03 Feb, 2019 03:00 pm
modi-speech-at-jammu

வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் என்று கருதப்படுகிற நாடளுமன்ற தேர்தலில் எப்படியாவது ஜெயித்து விடவேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு காங்கிரஸ் கட்சி விவசாயக்கடனை ஒரு கருவியாக பயன்படுத்தி வருகிறது என ஜம்முவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளார். 

காஷ்மீர் மாநிலம் லே நகருக்கு இன்று காலை வந்த பிரதமர் மோடி அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடினார். பின்னர் லே நகரில் அமையவுள்ள விமான நிலையம் ஒன்றிற்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, லடாக் பல்கலைக்கழகத்திற்கு அடிக்கல் நாட்டிய அவர், லே நகரில் நடைபெறும் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசினார். 

அவர் பேசும் போது, சுற்றுலாவை மேலும் மேம்படுத்த டெல்லியிலிருந்து லே நகரை இணைக்கும் ரயில் பாதை திட்டம் முடிவடையும் நிலைக்கு வந்துள்ளது. அந்த பணி முழுவதுமாக முடிந்த பிறகு, டெல்லிக்கும் லே நகருக்கும் இடையேயான தொலைவு குறையும். 

காங்கிரஸ் கட்சி வரும் தேர்தலில் ஜெயிக்க விவசாயக்கடனை ஒரு கருவியாக பயன்படுத்தி வருகிறது. 

ரூ. 6 லட்சம் கோடி மதிப்பிலான விவசாயக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று காங்கிரஸ் கட்சி உறுதியளித்தது. ஆனால் வெறும் 52,000 கோடி கடன் தான் ரத்து செய்துள்ளது. 

நேரடியாக மக்களுக்கு பணம் சென்று சேரும் வகையில், ஜன் தன் வாங்கிக்கணக்குகள் தொடங்கப்பட்டது மூலம் மக்கள் பயன்பெற்று வருகின்றனர். 

முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசு, நாட்டிற்கு என்ன தேவையோ அதை புறக்கணித்துள்ளது. அது உங்களுக்கு நன்றாகத் தெரியும். உதாரணமாக கார்டர்பூர் காரிடரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கவனம் செலுத்தியிருந்தால் குரு நானக் தேவ் நிலம் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்திருக்கும். 

இந்திய நாட்டைச் சேர்ந்த மக்கள் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷில் வாழ்கின்றனர். அவர்களுக்கு முறையாக நீதி இல்லாத சூழ்நிலையில் தான் வாழ்ந்து வருகின்றனர்" என்று அப்போது பிரதமர் நரேந்திர மோடி அவரது உரையில் குறிப்பிட்டுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close