ஏர் இந்தியா விமானத்தில் வழங்கிய உணவில் கரப்பான்பூச்சி

  Newstm Desk   | Last Modified : 03 Feb, 2019 03:20 pm
cockroach-found-in-food-served-to-air-india-passenger

போபாலில் இருந்து மும்பை சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பயணிக்கு கொடுக்கப்பட்ட உணவில் கரப்பான்பூச்சி இருந்தது குறித்து அப்பயணி வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. 

மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் இருந்து மும்பைக்கு நேற்று சென்ற ஏர் இந்தியா விமானத்தில் ரோகித் என்பவர் பயணித்துள்ளார். அப்போது அவருக்கு காலை உணவாக சாம்பாருடன் இட்லி வடை விநியோகிக்கப்பட்டுள்ளது.  அவர் அதனை திறந்து பார்த்த போது சாம்பாரில் கரப்பான்பூச்சி இருந்துள்ளது. 

 

— Manoj Khandekar (@manojkhandekar) February 2, 2019

 

இதுகுறித்து அவர் விமானத்தில் இருந்த ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அவர்கள் அதை கண்டுகொள்ளவில்லை என்று ரோகித் ராஜ் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்களையும் அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close