ஹம்பியில் தூண்களை உடைத்த மர்ம நபர்கள்: போலீசார் விசாரணை

  Newstm Desk   | Last Modified : 03 Feb, 2019 05:08 pm
miscreants-damage-carved-stone-pillar-at-hampi

சரித்தில் இடம்பெற்ற தொன்மையான நகரமாகத் திகழ்ந்த ஹம்பியில் இருக்கும் கற் தூண்களை மர்ம நபர்கள் உடைக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் உலக பாரம்பரிய சின்னமான ஹம்பி திகழ்ந்து வருகிறது. இங்கு பழங்கால கோவில்கள், மண்டபங்கள்,  கல்தூண்கள் உள்ளன. ஹம்பியை பாரம்பரிய சின்னமாக ‘யுனெஸ்கோ’வும் அறிவித்து உள்ளது. சமீபத்தில் ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகை வெளியிட்டிருந்த 2019-ம் ஆண்டு பார்க்க வேண்டிய சுற்றுலா தளங்களின் பட்டியலில் உலகளவில் ஹம்பி 2-வது இடத்தை பிடித்தது.

இவ்வளவு பெருமைகளை கொண்ட அந்த பகுதியில் விஷ்ணு கோவிலின் பின்புறம் நின்ற நிலையில் இருந்த கல்தூண் ஒன்றை மர்ம நபர்கள் கீழே தள்ளும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

இந்த வீடியோவை பார்த்த ஹம்பி பகுதி மக்கள் வாலிபர்களை கைது செய்து அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சாலைமறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஆனால் ஹம்பியில் கல்தூணை மர்ம நபர்கள் கீழே தள்ளும் வீடியோ  2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது என்று தொல்பொருள் ஆய்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், நேற்று பல்லாரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் ரங்கராஜன் தலைமையிலான போலீசார் ஹம்பிக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். பின்னர், சம்பவம் குறித்து ஹம்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொண்டனர். அத்துடன் அந்த நபர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close