மத்திய அரசுக்கு எதிராக சத்தியாகிரக போராட்டம்: மம்தா அதிரடி

  Newstm Desk   | Last Modified : 03 Feb, 2019 09:25 pm
modi-and-amit-shah-trying-to-organise-coup-the-west-bengal-government-mamata-banerjee

பிரதமர் நரேந்திர மோடியும், பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அமித் ஷாவும் சேர்ந்து, மேற்கு வங்கத்தில் ஆட்சியை கவிழ்க்க சதி செய்வதாக குற்றம் சாட்டியுள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி, சத்தியாகிரக போராட்டம் நடத்தவிருப்பதாக அறிவித்துள்ளார்.

சாரதா சிட் ஃபண்ட் தொடர்பாக, கொல்கத்தா காவல்துறை தலைவர் ராஜீவ் குமாரிடம் கேள்வி கேட்க சிபிஐ அதிகாரிகள் அவரது இல்லத்திற்கு விரைந்த நிலையில், மம்தா பானர்ஜி அங்கு வந்து அவருக்கு ஆதரவாக நின்றார். கொல்கத்தா காவல்துறை அதிகாரிகள், சிபிஐ அதிகாரிகளை வாகனங்களில் ஏற்றிச் சென்று பரபரப்பை ஏற்படுத்தினர். வாரண்ட் இல்லாமல் ராஜீவ் குமாரின் வீட்டிற்கு அவர்கள் வந்ததாக மம்தா தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

ராஜீவ் குமார் இந்தியாவின் சிறந்த காவல்துறை அதிகாரிகளில் ஒருவர் என கூறியிருந்த மம்தா, இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் கட்டமைப்புகளை அழித்து வருவதாக குற்றம்சாட்டினார். "கொல்கத்தா காவல்துறை தலைவரின் வீட்டுக்கு வாரண்ட் இல்லாமல் எப்படி வரமுடியும்? எனது காவல்துறையை நினைத்து எனக்கு பெருமையாக உள்ளது. கொல்கத்தா காவல்துறை தலைவர் ராஜீவ் குமார், நாட்டின் சிறந்த காவல்துறை அதிகாரிகளுள் ஒருவராவார்" என்றார் மம்தா. 

"பிரதமர் நரேந்திர மோடியும், பாரதிய  ஜனதா கட்சித் தலைவர் அமித் ஷாவும், மேற்குவங்கத்தில் ஆட்சியை கவிழ்க்க திட்டமிட்டு இவ்வாறு செய்து வருவகின்றனர். எதிர்கட்சிகளை ஒன்றிணைத்து நான் நடத்திய மாநாட்டிற்கு பதிலடியாக அவர்கள் இவ்வாறு செய்கின்றனர்" என்றார். மேலும், மத்திய அரசுக்கு எதிராக கொல்கத்தாவின் மெட்ரோ சேனல் பகுதியில் தர்ணா போராட்டம் நடத்த உள்ளதாகவும் "இது ஒரு சத்தியாகிரக போராட்டம்" என்றும் மம்தா தெரிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close