கொல்கத்தா சிபிஐ தலைவர் ராஜீவ் குமாரை விசாரிக்க சென்ற சிபிஐ அதிகாரிகள் ஐந்து பேரை கொல்கத்தா போலீசார் தடுத்து வைத்த நிலையில், அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சாரதா சிட் ஃபண்ட் முறைகேட்டில், கொல்கத்தா காவல்துறை தலைவர் ராஜீவ் குமார் விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் அவரது இல்லத்திற்கு இன்று சென்றனர். வாரண்ட் இல்லாமல் அவர்கள் சென்றதாக குற்றம் சாட்டிய மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, அவருக்கு ஆதரவாக அங்கு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கொல்கத்தா போலீசார் சிபிஐ அதிகாரிகளை தடுத்து, வாகனங்களில் அழைத்து சென்றனர். அவர்களை பிடித்து வைத்து, வாரண்ட் உள்ளதா என்பது குறித்து விசாரித்ததாக தெரிகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், 5 அதிகாரிகளும் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
newstm.in