தேர்தல் ஆணையத்திடம் பாஜக இன்று புகார்!

  Newstm Desk   | Last Modified : 04 Feb, 2019 10:17 am
west-bengal-issue-bjp-leader-s-meet-election-commissor-today

பாஜகவின் தேர்தல் பரப்புரைக்கு மேற்குவங்க மாநில அரசு தொடர்ந்து அனுமதி மறுத்து வருவது குறித்து பாஜக சார்பில் இன்று தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்படவுள்ளது.

பாஜக அமைச்சர்களான நிர்மலா சீதாராமன், முக்தர் அப்பாஸ் நக்வி, பூபேந்திர யாதவ் ஆகியோர் அடங்கிய குழு இப்புகாரை அளிக்கவுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரசாரம் செய்வதாக திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அவர் பயணிக்கும் ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கு மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு நேற்று திடீரென அனுமதி மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close