சிபிஐ அமைப்பின் புதிய இயக்குனராக ரிஷிகுமார் ஷுக்லா பதவியேற்பு!

  Newstm Desk   | Last Modified : 04 Feb, 2019 11:39 am
new-cbi-director-rishi-kumar-shukla-takes-charge

சிபிஐ அமைப்பின் புதிய இயக்குனராக ரிஷிகுமார் ஷுக்லா இன்று பதவியேற்றார்.

லஞ்சப்புகார் வழக்கில் சிபிஐ முன்னாள் இயக்குனர் அலோக் வர்மா குற்றம் சட்டப்பட்டுள்ளதையடுத்து, சிபிஐ-யின் புதிய இயக்குனராக ரிஷிகுமார் ஷுக்லாவை மத்திய அரசு தேர்வு செய்தது. பிரதமர் தலைமையிலான குழு 30 பேரை கொண்ட பட்டியலில் இருந்து ஷூக்லாவை தேர்வு செய்துள்ளது. 

ரிஷிகுமார் ஷுக்லா மத்தியப் பிரதேச மாநில முன்னாள் டிஜிபியும், ஐபிஎஸ் அதிகாரியும் ஆவார். சிபிஐ இயக்குனர் பதவிக்கு முன்னதாக  ஷுக்லா மத்தியப்பிரதேச போலீஸ் ஹவுசிங் கார்ப்பரேஷனின் சேர்மனாகப் பணியாற்றினார்.

இதையடுத்து சிபிஐ அமைப்பின் புதிய இயக்குனராக ரிஷிகுமார் ஷுக்லா இன்று பதவியேற்றுக்கொண்டார். இவரது பதவிக்காலம் 2 ஆண்டுகள் ஆகும்.

முன்னதாக, 'சிபிஐ இயக்குனரை நியமிப்பதில் மத்திய அரசு ஏன் இவ்வளவு தாமதம் காட்டுகிறது? இயக்குனருக்கு பதிலாக இடைக்கால இயக்குனரை நியமிப்பது அவ்வளவு நல்லதல்ல.  சிபிஐ இயக்குநர் என்ற ஒரு கருத்தாக்கமே வெறுப்பாக இருக்கிறது' என உச்ச நீதிமன்றம் கூறியதையடுத்து தான் புதிய சிபிஐ இயக்குனரை மத்திய அரசு நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close