மேற்குவங்க ஆளுநரிடம் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விசாரிப்பு!

  Newstm Desk   | Last Modified : 04 Feb, 2019 12:22 pm
home-minister-rajnath-singh-has-dialled-the-governor-of-west-bengal

மேற்குவங்க மாநிலத்தின் சட்டம்- ஒழுங்கு நிலைமை குறித்து அம்மாநில ஆளுநர் திரிபாதியிடம் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேட்டறிந்தார். 

சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக, கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரின் வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் நேற்று சென்ற போது, அவர்களிடம் வாரண்ட் இல்லை என்று கூறி மாநில போலீசார் அவர்களை தடுத்தனர். இதையடுத்து முதல்வர் மம்தா பானர்ஜியும் அங்கு விரைந்து சிபிஐ அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே,  மேற்கு வங்க மாநில ஆட்சியை கவிழ்க்க, மத்திய அரசு திட்டமிடுவதாகக் கூறி, மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் நேற்றிரவு முதல் தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார்.

இதையடுத்து, மாநிலத்தின் சட்டம்- ஒழுங்கு நிலைமை குறித்து மேற்கு வங்க மாநில ஆளுநர் கே.என். திரிபாதியிடம் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேட்டறிந்தார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close