தொடரும் மம்தாவின் தர்ணா!: எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆதரவு

  Newstm Desk   | Last Modified : 04 Feb, 2019 01:21 pm
west-bengal-cm-continuous-her-agitation-against-central-govt

சிபிஐ விவகாரத்தை முன்வைத்து மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மேற்கொண்டு வரும் தர்ணா இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது.

சாரதா நிதி நிறுவன மோசடி விவகாரம் தொடர்பாக, கொல்கத்தா மாநகர காவல் ஆணையர் ராஜீவ் குமாரை விசாரிக்க சிபிஐ முயன்றதற்கு மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்தார்.

மேலும், தமது தலைமையிலான மாநில அரசை கலைக்க மத்திய பாஜக அரசு திட்டமிட்டு வருவதாகக் கூறி, கொல்கத்தா நகரின் முக்கிய இடங்களில் ஒன்றான மெட்ரோ சேனல் பகுதியில் அவர் நேற்றிரவு 9 மணியளவில் தர்ணாவை தொடங்கினார்.

அவரது தர்ணா இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது. இன்று காலை தர்ணாவின்போது ஆயிரக்கணக்கான கட்சித் தொண்டர்கள் மத்தியில் அவர் பேசியது:

மோடி தலைமையிலான மத்திய அரசு பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. மேலும் ஜனநாயக உரிமைகளையும் பறித்துக் கொண்டிருக்கிறது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டனர். அப்போது அவர்களின் நிலத்தையும், உயிரையும் மேற்கு வங்க மாநில அரசுதான் காத்தது என மம்தா பேசினார்.

ஆதரவு: இதனிடையே, மம்தாவின் தர்ணா போராட்டத்துக்கு, ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், முன்னாள் பிரதமர் தேவெகௌடா உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close