தால் ஏரியில் பயணம்: தில் காட்டிய மோடி!

  Newstm Desk   | Last Modified : 04 Feb, 2019 02:53 pm
modi-had-travelled-in-dal-lake

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான தால் ஏரியில் பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொண்டார்.

பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு பிரதமர் மோடி நேற்று சுற்றுப் பயணம் மேற்கொண்டார். 

அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர், ஸ்ரீநகரில் அமைந்துள்ள உலக அளவில் பெயர்பெற்ற சுற்றுலா ஸ்தலமான தால் ஏரியில் சில மணிநேரம் பயணம் மேற்கொண்டார். அப்போது அவர், ஏரியின் தூய்மையைப் பணிகள் குறித்தும் ஆய்வு நடத்தினார்.

தீவிரவாத அச்சுறுத்தல்கள் காரணமாக, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு அரிதாகதான் இதுவரை இருந்த பிரதமர்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

அவ்வாறிக்க, பிரதமர் மோடி அம்மாநிலத்துக்கு அவ்வப்போது பயணம் மேற்கொள்வதுடன், இந்த முறை தால் ஏரியிலும் அவர் பயணம் மேற்கொண்டுள்ளது அந்த மாநிலத்தின் வளர்ச்சிக்கான அடையாளமாக பார்க்கப்படுகிறது.

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close