கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்காக, மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தர்ணாவில் ஈடுபட்டுள்ளதன் பின்னணி என்னவென்று பாஜக கேள்வியெழுப்பியுள்ளது.
இதுகுறித்து, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியது:
சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக, உச்சநீதிமன்றத்தின் அனுமதியின் பெயரில்தான், மேற்கு வங்க மாநிலத்தில் சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், ஒரு காவல் துறை அதிகாரிக்காக ஒரு மாநிலத்தின் முதல்வரான மம்தா பானர்ஜி தர்ணா ஈடுபட்டுள்ளதற்கான காரணம் என்ன என்ற சந்தேகம் எழுகிறது.
தன்னுடைய இந்த நடவடிக்கையின் மூலம், அவர் எதை மறைக்க முயல்கிறார்? தன்னை தானே தற்காத்துக் கொள்ள முயற்சிக்கிறாரா? என்பன போன்ற அடுக்கடுக்கான கேள்விகள் எழுகின்றன.
இன்று மம்தாவுக்கு ஆதரவு தெரிவித்து வரும் அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரையும் ஊழல் என்ற ஒற்றை வார்த்தைதான் ஒருங்கிணைத்துள்ளது. அவர்கள் தங்களின் ஊழல்களால் ஒன்றுபட்டும், நாட்டின் வளர்ச்சிக்கான பார்வையில் வேறுபட்டும் இருக்கின்றனர்.
newstm.in