தர்ணா விஷயத்தில் கெஜ்ரிவாலை பின்பற்றுகிறார் மம்தா பானர்ஜி: ரவிசங்கர் பிரசாத்

  Newstm Desk   | Last Modified : 04 Feb, 2019 04:26 pm
minister-ravishankar-prasad-press-meet-and-talks-about-west-bengal-issue

தர்ணா செய்வதன் மூலமாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை பின்பற்றுகிறார் மம்தா பானர்ஜி என மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார். 

இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மேற்குவங்க முதல்வர் மற்றும் அரசியல் கட்சிகளோடு இணைந்து காவல்துறையும் தர்ணா போராட்டத்தில் ஈடுபடுகிறது. மம்தாவுடன் காவல் ஆணையர் ஏன் போராட்டம் நடத்துகிறார்? இதற்கு என்ன அர்த்தம்? சட்டம் ஒழுங்கினை காக்க வேண்டிய காவல்துறை அதிகாரிகளே போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

சாரதா நிதி நிறுவன மோசடி இப்போது எழுந்தது இல்லை. பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்னதாகவே தொடரப்பட்ட வழக்கு. இப்போது சிபிஐ அதிகாரிகளின் விசாரணைக்கு காவல் ஆணையர் ராஜீவ் குமார் ஒத்துழைக்க மறுக்கிறார். இது என்ன நியாயம்? முன்னதாக, ஆஜராகி விளக்கமளிக்கும்படி முறையாக காவல் ஆணையருக்கு மூன்று முறை சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஆவணங்களை வழங்கவும் காவல்துறையிடம் சிபிஐ அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். ஆனால், அவர்களிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. அதனால் தான் சிபிஐ அதிகாரிகள் சென்றனர். இதற்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தர்ணா செய்வதன் மூலமாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை பின்பற்றுகிறார்" என்று பேசியுள்ளார். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close