தம்பிக்கு அரசு வேலை; வீட்டை கொளுத்திய அண்ணன்! - 2 குழந்தைகள் உள்பட 4 பேர் பலி

  Newstm Desk   | Last Modified : 04 Feb, 2019 05:37 pm
angry-over-brother-getting-a-govt-job-man-sets-afire-house-in-bengal-killing-four-family-members

தனது தம்பிக்கு அரசு வேலை கிடைத்ததால் பொறாமைபட்டு அண்ணன் வீட்டை கொளுத்தியதில், அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலியாகியுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏறப்டுத்தியுள்ளது. 

மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் உள்ள மடன்டோலா கிராமத்தை சேர்ந்த மக்கான், அவரது தம்பி கோபின்டா, அவரது அண்ணன் பிஹாஷ் ஆகிய மூவரும் வசித்து வருகின்றனர். 

இந்நிலையில், அவரது தந்தை அரசுப்பணியில் இருந்த போது மரணமடைந்தால், அவரது இளைய மகன் கோபின்டாவுக்கு அரசு வேலை வழங்கப்பட்டது. இதனால் கோபத்தில் இருந்த மக்கான் நேற்று இரவு அனைவரும் தூங்கிக்கொண்டிருக்கும் போது திடீரென வீட்டின் மேற்கூரையில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். அந்த வீட்டில் மக்கானின் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளும் இருந்துள்ளனர். 

இந்நிலையில், வீடு எரிந்ததில், கோபின்டா, பிஹாஷ் மற்றும் கோபின்டாவின் இரண்டு பெண் குழந்தைகள் என நான்கு பேர் பலியாகினர். மேலும், தீ வைத்த மக்கானின் மனைவி, அவரது இரு குழந்தைகள், கோபின்டாவின் மனைவி ஆகியோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ளனர். 

இச்சம்பவம் தொடர்பாக காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது. மேலும், குற்றவாளி மக்ககானை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close