மேற்குவங்க சர்ச்சை: மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்!

  Newstm Desk   | Last Modified : 04 Feb, 2019 06:37 pm
sc-declines-centre-s-plea-for-urgent-hearing

கொல்கத்தா காவல்துறை தலைவர் ராஜீவ் குமார், சாரதா சிட் ஃபண்ட் விவகாரத்தில், ஆதாரங்களை அழிக்கக் கூடும் என குற்றம் சாட்டி, அதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற சிபிஐ-யின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.

கொல்கத்தா காவல்துறை தலைவர் ராஜீவ் குமாரை விசாரிக்க, சிபிஐ அவரது இல்லத்திற்கு சென்ற போது, சிபிஐ அதிகாரிகளை கொல்கத்தா போலீசார் பிடித்து வைத்தனர். இதைத் தொடர்ந்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மத்திய அரசுக்கு எதிராக தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார். இந்நிலையில், சாரதா சிட் பண்ட் விவகாரத்தில், ஆதாரங்களை கொல்கத்தா காவல்துறை தலைவர் ராஜீவ் குமார் அழித்து விடுவார், என குற்றம்சாட்டி, அவரை தடுக்குமாறும், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் கோரி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கோரியது. இது மிகவும் வழக்கத்திற்கு மாறான ஒரு ஆபத்தான நேரம் என்றும் மத்திய அரசு எச்சரித்தது.

மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, மத்திய அரசின் குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை என தெரிவித்து, கோரிக்கையை நிராகரித்துள்ளது. "அவர்கள் ஆதாரங்களை அழிக்க போவதற்கு எந்த ஆதாரத்தையும் நீங்கள் சமர்ப்பிக்கவில்லை. நீங்கள் ஒரு சிறிய ஆதாரத்தை காட்டினால் கூட, அவர்கள் வருத்தப்படும் அளவுக்கு கடும் நடவடிக்கையை நங்கள் எடுப்போம்" என்று உச்சநீதிமன்றம் கூறியது. ஆதாரங்களை சமர்ப்பிக்க, சிபிஐ-க்கு நீதிமன்றம் ஒரு நாள் கால அவகாசம் வழங்கியுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close