இது சின்னப்புள்ளத்தனமா இல்ல இருக்கு? : ராகுலை கலாய்த்த கட்கரி!

  Newstm Desk   | Last Modified : 05 Feb, 2019 08:35 am
nitin-gadkari-only-one-in-bjp-with-some-guts-rahul

தமது துணிச்சல் குறித்து ராகுல் காந்தியின் நற்சான்று ஒன்றும் தமக்கு தேவையில்லை எனக் கூறியுள்ள மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, ராகுலின் இதுபோன்ற பதிவுகள் வியப்பளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பாஜக  மூத்த தலைவர்களின் ஒருவரும், மத்திய அமைச்சருமான நிதின் கட்கரி, மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் பாஜக மாணவரணி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சனிக்கிழமை பங்கேற்றார். அப்போது அவர் , "குடும்பத்தை கவனிக்க முடியாதவர்களால் நாட்டை நிர்வகிக்க முடியாது" என கருத்துத் தெரிவித்திருந்தார்.

அவரது இந்த கருத்தை மேற்கோள்காட்டி, ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், " கட்கரி அவர்களே... துணிச்சலான உங்களுக்கு கருத்துக்கு என் பாராட்டுக்கள். இதேபோன்று ரஃபேல் விவகாரம், விவசாயிகள் பிரச்னை, அரசு அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுவது போன்றவை குறித்தும் நீங்கள் பேச வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

கட்கரி பதிலடி: ராகுலின் இந்த பதிவுக்கு நிதின் கட்கரி தக்க பதிலடி கொடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "ராகுல் அவர்களே... எனது தைரியத்துக்கு உங்களின் நற்சான்று ஒன்றும் தேவையில்லை. ஒரு தேசியக் கட்சியின் தலைவரான நீங்கள், ஊடகங்களால் திரித்து வெளியிடப்படும் செய்திகளை கொண்டு,  மத்திய அரசை இப்படி குற்றம்சாட்டுவது வியப்பளிக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியானபோது, "தேர்தல் தோல்விகளுக்கு கட்சித் தலைமைதான் பொறுப்பேற்க வேண்டும்" என நிதின் கட்கரி கூறியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close