கடும் குளிர் நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

  Newstm Desk   | Last Modified : 05 Feb, 2019 11:35 am
cold-weather-will-continue-in-delhi

டெல்லி, உத்தர பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில், கடும் குளிர் நீடிக்கிறது. இதனால், ரயில், விமான போக்குவரத்து மட்டுமின்றி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

வட மாநிலங்களில், கடந்த சில நாட்களாக, கடும் குளிர் மக்களை வாட்டி வதைக்கிறது. இதனால், பள்ளி, கல்லுாரிகள், அரசு அலுவலகங்கள் இயங்குவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. 

பகல் நேரத்திலும் பனிப் பொழிவு அதிகம் காணப்படுவதால், சாலை போக்குவரத்து அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. ராஜ்தானி உள்ளிட்ட அதிவேக ரயில்களும் கூட, டில்லியை சென்றடைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. விமான போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து, வானிலை ஆய்வு மையத்தின் சார்பில் கூறப்பட்டுள்ளதாவது: ‛‛ இமயமலையின் மேற்கு பகுதியில், குளிர் காற்று வீசி வருகிறது. அதே சமயம், பாகிஸ்தானை ஒட்டிய, ராஜஸ்தான் மாநில எல்லையோர கிராமங்களில் மழை பெய்து வருகிறது. 
வளிமண்டலத்தில் ஏற்பட்டிருக்கும் திடீர் மாற்றம் காரணமாக, வட மாநிலங்களில் குளிர் அதிகரித்துள்ளது. இந்த வானிலை மாற்றம் மேலும் சில நாட்களுக்கு தாெடரும் என்பதால், டெல்லி, உத்தர பிரதேசம், உத்தரகண்ட், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், குஜராத்தின் சில பகுதிகளில், குளிர் அதிகம் காணப்படும்.

பனிப் பொழிவு அதிகம் இருக்கும் என்பதால், வாகன ஓட்டிகள், சாலைகளில் கவனமாக செல்வது நல்லது. சாலை ஓரங்களில் தங்கியிருப்போர், அரசு காப்பகங்களில் தங்குவது நல்லது’’ என, அதில் கூறப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close