திரிணமூல் காங்கிரஸ் அமளி - நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு

  Newstm Desk   | Last Modified : 05 Feb, 2019 11:57 am
both-houses-of-parliament-adjourned-due-to-ruckus-by-tmc

நாடாளுமன்றத்தில், சிபிஐ விவகாரத்தை முன்வைத்து திரிணமூல் காங்கிரஸ் கட்சி தொடர் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

மக்களவை, நண்பகல் 12 மணி வரையிலும், மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் நிதி நிறுவன மோசடி தொடர்பான வழக்கில், காவல்துறை அதிகாரி ராஜீவ் குமாரை சிபிஐ விசாரிக்க திரிணமூல் காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதற்கிடையே, அந்த அதிகாரி சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. அதே சமயம், நாடாளுமன்றத்திலும் இந்த விவகாரம் எதிரொலித்தது.

மக்களவையில், சிபிஐ நடவடிக்கைக்கு எதிராக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் கோஷமிட்டனர். அதேபோல, மாநிலங்களவையிலும் அமளி நீடித்தது. இந்தச் சூழலில் அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன. முன்னதாக, துனணை மானியக் கோரிக்கைகளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திட்டமிட்டிருந்தார். ஆனால், அமளியால் அந்த நடவடிக்கை தடைபட்டுள்ளது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close