ஊழல்வாதிகள் ஒன்றிணைந்து இந்தியாவையே கைப்பற்ற துடிக்கின்றனர்: அருண் ஜேட்லி 

  Newstm Desk   | Last Modified : 05 Feb, 2019 12:43 pm
kleptocrat-s-club-now-aspires-to-capture-the-reigns-of-india-arun-jaitley

ஊழல்வாதிகள் எல்லாம் ஒன்றிணைந்து, தற்போது இந்தியாவையே கைப்பற்ற துடிக்கின்றனர் என  மம்தா பானர்ஜியின் தர்ணாவுக்கு ஆதரவு தெரிவித்து வரும் அரசியல் கட்சித் தலைவர்களை மத்திய அமைச்சர் அருண்  ஜேட்லி கடுமையாக சாடியுள்ளார்.

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கின் விசாரணைக்காக, கொல்கத்தா மாநகர காவல் ஆணையர் ராஜீ்வ் குமாரின் இல்லத்துக்கு சிபிஐ சென்றதை கண்டித்து, மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மேற்கொண்டு வரும் தர்ணா, கொல்கத்தாவில் இன்று மூன்றாவது நாளாக தொ டர்கிறது.

அவரது இந்த போராட்டத்தை கடுமையாக விமர்சித்து அருண் ஜேட்லி, தமது வலைப்பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ள பதிவு:
உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி தான், சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இவ்வழக்கின் தேவையைக் கருதி, ஓர் காவல் துறை அதிகாரியிடம் விசாரணை மேற்கொண்டால் அது எப்படி அவசரநிலை பிரகடனமாகும்?  இது எப்படி கூட்டாட்சி மீது நடத்தப்படும் தாக்குதலாகும்? அரசு அமைப்புகளை எவ்வாறு சீர்குலைப்பதாகும்?

இந்த விவகாரத்தில்,  தமது ஆத்திரத்துக்கும், தன் பதவிக்கு சற்றும் பொருந்தாத வகையிலான அவரது நடவடிக்கைக்கும் பின்னணியில் உள்ள காரணங்கள் என்ன  என்பதை மம்தா தெளிவுப்படுத்த வேண்டும்.

மேலும், தமது தர்ணாவில் பங்கேற்க அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளதற்கான நோக்கத்தையும் அவர் தெரியப்படுத்த வேண்டும்.

தங்களது ஆட்சி, அதிகாரத்தை பயன்படுத்தி, பொதுமக்களின் வரிப் பணத்தையும், நாட்டின் இயற்கை வளங்களையும் கொள்ளையடித்து, அதன் மூலம் தங்களது பணபலத்தை உயர்த்திக் கொள்ளும் ஒரு கும்பல் நாட்டில் உலவிக் கொண்டுள்ளது.

தங்கள் மீது ஊழல் கரை படிந்த அந்தக் கும்பலைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள் தான்  மம்தாவின் தர்ணாவுக்கு தற்போது ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஊழல் எனும் கூடாரத்தின்கீழ் இன்று ஒன்றிணைந்துள்ள அவர்கள், நாளை இந்தியாவையே கைப்பற்றிவிடலாம் எனத் துடித்துக் கொண்டிருகின்றனர் என அருண் ஜேட்லி சாடியுள்ளார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close