காருக்காக ஓட்டுநரை கொலை செய்த இளம் ஜோடி!!

  Newstm Desk   | Last Modified : 05 Feb, 2019 01:22 pm
ola-cab-driver-killed-by-couple-in-delhi

டெல்லியில் காரை திருடுவதற்காக, அதன் ஓட்டுநரை கொலை செய்து துண்டாக, துண்டாக வெட்டி வீசியெறிந்த இளம் ஜோடியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தனியார் கால் டாக்ஸி  நிறுவனத்தில், டெல்லியைச் சேர்ந்த ராம் கோவிந்த் என்பவர் தன்னுடைய காரை இணைத்து தொழில் செய்து வந்தார். வழக்கம்போல தொழிலுக்கு சென்ற அவரை கடந்த மாதம் 29ம் தேதி முதல் காணவில்லை. இதையடுத்து அவரது மனைவி அளித்த புகார் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். ராம் கோவிந்த் காணாமல் போவதற்கு முன்பு, அவரிடம் கார் புக் செய்த பயணிகளை விசாரித்தனர். அதேசமயம், கோவிந்தின் கார், கடைசியாக மாதாங்கீர் என்ற பகுதியில் இருந்து காபஷேரா என்ற பகுதிக்கு சென்ற பிறகு அதில் இருந்த ஜிபிஎஸ் செயல்பாடு நின்றுள்ளது தெரியவந்தது. கோவிந்தின் செல்போன் சிக்னலும் கண்காணிக்கப்பட்டது.

இறுதியாக, ராம் கோவிந்திடம் 29ம் தேதி நள்ளிரவில் பயணம் மேற்கொண்டவர்களான பர்ஹத் அலி (34), சீமா சர்மா(30) ஆகிய இருவரும், அவரது காரை பயன்படுத்தி வருவதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, காரை திருடுவதற்காகவே திட்டமிட்டு ராம் கோவிந்தை கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளனர். அதாவது, தங்களை வீட்டில் இறக்கி விட்ட ராம் கோவிந்தை, டீ குடிக்க அழைத்த அந்த ஜோடி, டீயில் மயக்க மருந்தை கலந்து கொடுத்துள்ளது. பின்னர் அவரை கொலை செய்துவிட்டு, சாவகாசமாக வெளியே சென்று கத்திகளை வாங்கி வந்துள்ளனர். மேலும், கோவிந்தின் உடலை துண்டு, துண்டாக வெட்டி, 3 பார்சல்களாகப் பிரித்து, அதை நொய்டா அருகேயுள்ள சாக்கடையில் வீசிச் சென்றுள்ளனர். 

அந்த ஜோடியிடம் இருந்து, ராம் கோவிந்தின் ஹுண்டாய் எக்ஸ்-செண்ட் கார் மற்றும் அவரது செல்போன் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. ஒரு காருக்காக ஓட்டுநரை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close