ஊழல் காவல்துறை அதிகாரிகளை காப்பாற்றும் மம்தா: யோகி பாய்ச்சல்

  Newstm Desk   | Last Modified : 05 Feb, 2019 06:14 pm
mamata-is-saving-corrupt-police-officers-yogi-adityanath

மேற்கு வங்கத்தின் புருலியா பகுதியில் நடைபெற்ற ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிய உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஊழல் போலீஸ் அதிகாரிகளை காப்பாற்றுவதாக கடுமையாக சாடினார்.

மேற்குவங்கத்தில் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஹெலிகாப்டர் மூலம் வந்த நிலையில் அவரது ஹெலிகாப்டரை தரையிறக்க அனுமதி கிடைக்கவில்லை. இதை தொடர்ந்து, ஜார்கண்டில் ஹெலிகாப்டரை தரையிறக்கி, அங்கிருந்து கார் மூலமாக புருலியாவுக்கு யோகி வந்தார். 

பொதுக்கூட்டத்தில் பேசிய போது, "திரிணாமுல் காங்கிரஸின் மேற்கு வங்க அரசு, மக்களுக்கு எதிரானது.; ஜனநாயகத்துக்கு எதிரானது. தேசிய பாதுகாப்புக்கு மேற்கு வங்க அரசால் களங்கம் ஏற்பட்டுள்ளது" என்று கூறினார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close