வெனிசுவேலா எதிர்க்கட்சித் தலைவரை அதிபராக அங்கீகரிக்கும் 30 நாடுகள்

  Newstm Desk   | Last Modified : 05 Feb, 2019 08:11 pm
30-countries-recognise-venezuela-opposition-leader-guaido-as-president

வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மடுரோவுக்கு எதிராக எழுந்துள்ள அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் ஜுவான் குவெய்டோவுக்கு ஆதரவு அதிகரித்து வரும் நிலையில், 30 நாடுகள் எதிர்க்கட்சித் தலைவரை இடைக்கால அதிபராக அங்கீகரித்துள்ளன.

பணவீக்கம் காரணமாக வெனிசுவேலா நாட்டு மக்கள் போராடி வருகின்றனர். அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காமல் லட்சக்கணக்கான மக்கள் பசியால் தவித்து வரும் நிலையில், அந்நாட்டின் அதிபர் நிகோலஸ் மடுரோவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரும் நாடாளுமன்ற சபாநாயகருமான ஜுவான் குவெய்டோவுக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. அதிபர் மடுரோவை குவெய்டோ தேர்தலில் வீழ்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஐரோப்பிய நாடுகள், அந்நாட்டில் உடனடியாக அதிபர் தேர்தலை நடத்த வலியுறுத்தினர். ஆனால், அதை அதிபர் மடுரோ ஏற்க மறுத்துவிட்டார். 2018ல் நடந்த அதிபர் தேர்தலில், மடுரோ பல்வேறு மோசடி செய்து வெற்றிபெற்றதாக கூறப்படும் நிலையில், ஆட்சி முடியும் முன்கூட்டியே தேர்தல் நடத்த வேண்டும் என ஐரோப்பிய யூனியன் நாடுகள் சார்பில் இறுதி எச்சரிக்கை கொடுக்கப்பட்டது. அதற்கு அவர் மறுத்ததால், 19 ஐரோப்பிய யூனியன் நாடுகள், சபாநாயகர் குவெய்டோவை அதிபராக அங்கீகரிப்பதாக தெரிவித்தன. இதைத் தொடர்ந்து, தற்போது அர்ஜென்டினா பிரேசில், சிலி, கனடா உள்ளிட்ட 11 அமெரிக்க நாடுகளும் எதிர்க்கட்சித் தலைவரை இடைக்கால அதிபராக அங்கீகரிப்பதாக தெரிவித்துள்ளன.  

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close