லோக்பாலுக்காக நடத்திய உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார் அன்னா ஹசாரே

  Newstm Desk   | Last Modified : 05 Feb, 2019 08:57 pm
anna-hazare-ends-7-day-hunger-strike

பிரபல சமூக செயற்பாட்டாளர் அன்னா ஹசாரே, மத்திய மாநில அரசுகள் லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தாவை நிறுவ வேண்டும் என வலியுறுத்தி கடந்த ஒரு வாரமாக நடத்தி வந்த உண்ணாவிரத போராட்டத்தை இன்று முடித்துக்கொண்டார்.

மத்திய மற்றும் மாநில அளவில் லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தாவை அமைக்க வேண்டும், என வலியுறுத்தி பிரபல சமூக செயற்பாட்டாளர் அன்னா ஹசாரே, கடந்த ஒரு வாரமாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்தார். 81 வயதான அவர் மகாராஷ்டிராவின் அஹ்மத்நகர் பகுதியில் கடந்த ஜனவரி 30-ஆம் தேதி போராட்டத்தை துவக்கினார்.

ஒரு வாரமாக தொடர்ந்து வரும் இந்த போராட்டத்தால் அவர் உடல் எடை 4.3 கிலோ குறைந்ததாக தெரிகிறது. அவரது உடல்நிலை மோசமாகி வருவதாக மருத்துவர்கள் எச்சரித்ததை தொடர்ந்து, இன்று மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபாத்வனிஸ் மற்றும் மத்திய அமைச்சர்கள் ராதா மோகன் சிங் மற்றும் சுபாஷ் பம்ரே ஆகியோர் நேரில் சென்று அன்னா ஹசாரேவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில், அவர் தனது போராட்டத்தை வாபஸ் பெறுவதாக தெரிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close