வாட்ஸ் ஆப்பில் பெண் போல பேசி என்.ஆர்.ஐ தொழிலதிபரை கொலை செய்த ஆந்திர நபர்!

  Newstm Desk   | Last Modified : 06 Feb, 2019 01:45 pm
honey-trapped-on-whatsapp-telugu-nri-businessman-killed-in-andhra-pradesh-for-unpaid-loans

வாட்ஸ் ஆப்பில் பெண் போன்று பேசி, அமெரிக்காவில் வசித்து வந்த என்.ஆர்.ஐ தொழிலதிபரை ஆந்திராவுக்கு வரவழைத்து அவரை கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவை சேர்ந்தவரும், தற்போது அமெரிக்காவில் பணியாற்றி வரும் என்.ஆர்.ஐ தொழிலதிபரான ஜெயராம், சொந்த மாநிலத்தில் தொழிலில் நஷ்டமடைந்ததையடுத்து, அமெரிக்கா சென்றார். தற்போது அமெரிக்காவில் கோஸ்டல் பேங்க் என்ற வங்கியில் இயக்குனராக பணியாற்றி வந்தார். 

இந்நிலையில் அவருக்கு வாட்ஸ்ஆப் மூலமாக பெண் ஒருவர் மெசேஜ் செய்துள்ளார். பதிலுக்கு அவரும் பேச இருவருக்கும் நல்ல பழக்கம் ஏற்பட்டது. பின்னர் தன்னை நேரில் சந்திக்க ஆந்திரா வருமாறு அந்த பெண் கேட்டுள்ளார். அதன்படி, ஜெயராமும் ஆந்திரா சென்றுள்ளார். 

ஹைதராபாத் ஜூபிலி மலை அருகே சென்ற ஜெயராமுக்கு அங்கு அதிர்ச்சி காத்திருந்தது. தனக்கு கடன் கொடுத்த ராஜேஷ் ரெட்டி நின்று கொண்டிருந்தான். பின்னர் தான் ஜெயராமுக்கு தெரிந்தது தனக்கு வாட்ஸ்ஆப் செய்தது ஒரு பெண் அல்ல. அது ராகேஷ் ரெட்டி என்பது. 

ராகேஷிடம் ரூ. 4 கோடி வாங்கிய ஜெயராம் அதை திருப்பி தரவில்லை. மேலும், ராகேஷின் நம்பரை வாட்ஸ் ஆப்பில் பிளாக்  செய்துள்ளார். இதனால் கோபமடைந்த ராகேஷ், ஜெயராமை கையும் களவுமாகபிடிக்க  வேண்டும் என்று எண்ணி அவரை பெண் போன்று பேசி வரவழைத்துள்ளார். 

ஆந்திராவுக்கு வந்த ஜெயராமிடம் ராகேஷ் கேட்க, அவர் பணம் இல்லை என்று மறுத்துள்ளார். ரூ.6 கோடி ராகேஷ் கேட்க, தன்னிடம் ரூ.6 லட்சம் இருப்பதாக கூறியுள்ளார். பின்னர் வாக்குவாதம் முற்றவே, ஆத்திரம் அடைந்த ராகேஷ் ஜெயராமை கொலை செய்து, அவரது காரிலேயே கிடத்தி, விபத்து ஏற்பட்டது போல  உருவாக்கி விட்டு அவ்விடத்தை விட்டு சென்றுள்ளார். 

ஜெயராம் இறந்து கிடப்பதை அறிந்து, தகவல் தெரிய வந்ததையடுத்து அவரது உடலைக் கைப்பற்றி அந்த மாநில போலீசார் மேற்கொண்ட விசாரணையில்  இதுகுறித்த தகவல்கள் தெரிய வந்துள்ளன. அதையடுத்து கொலைக்குக் காரணமான ராகேஷ் மற்றும் அவரது நண்பர் ஒருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close