காந்தி உருவப்படத்தை துப்பாக்கியால் சுட்ட பெண்  கைது!

  Newstm Desk   | Last Modified : 06 Feb, 2019 01:54 pm
hindu-mahasabha-s-pooja-pandey-arrested-for-recreating-mahatma-gandhi-s-assassination

காந்தியின் உருவப்படத்தை துப்பாக்கியால் சுட்டு சர்ச்சையில் சிக்கிய ஹிந்து மகாசபையின் தலைவரான  பூஜா பாண்டேவை, , அலிகார் போலீஸார் கைது செய்தனர். அவருடைய கணவர் அசோக் பாண்டேவும் கைது செய்யப்பட்டார். அவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

"நாங்கள் எந்த குற்றமும் இழைக்கவில்லை. எனவே, இதற்காக  வருத்தம் தெரிவிக்க போவதில்லை. நாங்கள் எங்களது அடிப்படை உரிமைகளின்படிதான் செயல்பட்டுள்ளோம்" என பூஜா பாண்டே தெரிவித்தார்.

மகாத்மா காந்தியின் நினைவு நாளான ஜனவரி 30-ஆம் தேதி, உத்தரப் பிரதேச மாநிலம், அலிகாரில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்தை சுடுவது போன்ற செயலில் பூஜா பாண்டே ஈடுபட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close