ராணுவத்தில் இன்னும் எத்தனை கருப்பு ஆடுகள்? அதிகாரிகள் விசாரணை

  Newstm Desk   | Last Modified : 06 Feb, 2019 04:06 pm
army-questions-3-jawans-over-killing-of-soldier

ஜம்மு - காஷ்மீரில், ராணுவ வீரர் அவுரங்கசீப், பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய, சக வீரர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தை சேர்ந்தவர், அவுரங்கசீப். ராஷ்ட்ரீய ரபிள்ஸ் பிரிவில் ராணுவ வீரராக பணியாற்றிய இவர், பயங்கரவாதிகளை ஒடுக்கும் படையில் இடம் பெற்றிருந்தார். 

விடுமுறையில், வீட்டிற்கு சென்ற அவரங்சீப்பை பின் தொடர்ந்த பயங்கரவாதிகள், அவர் பைக்கில் சென்று கொண்டிருந்த போது, அவரை கடத்தி சென்று, கொலை செய்தனர். அவரின் உடல் பாகங்கள் ஆங்காங்கே வீசப்பட்டன.

கடந்த ஆண்டு நடந்த இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், அவரங்கசீப்பின் நடவடிக்கைகள் குறித்து, சக ராணுவ வீரர்கள் மூவர், பயங்கரவாதிகளுக்கு தகவல் கொடுத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

இதையடுத்து, வீரர்கள் மூவரும் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இதையடுத்து, ராணுவத்தில் மேலும், எத்தனை கருப்பு ஆடுகள் உள்ளன என்ற வகையிலும், அதிகாரிகள் விசாரிக்கின்றனர். 

 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close