தெஹ்ரீக்- உல்-முஜாகிதீன் அமைப்புக்கு மத்திய அரசு  தடை!

  Newstm Desk   | Last Modified : 06 Feb, 2019 05:45 pm
j-k-based-terror-group-tehreek-ul-mujahideen-banned

காஷ்மீரில் உள்ள பயங்கரவாத அமைப்பான  தெஹ்ரீக்- உல்-முஜாகிதீன் அமைப்பு இயங்க மத்திய அரசு  தடை விதித்துள்ளது. 

காஷ்மீரில் செயல்படும் பயங்கரவாத அமைப்பான தெஹ்ரீக்- உல்-முஜாகிதீன் (டி.யூ.எம்) 1990ம் ஆண்டு ஜூன் மாதம் யூனுஸ்கான் என்பவரால் தொடங்கப்பட்டது. இந்தியாவில் இருந்து காஷ்மீரை பிரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டனர். காஷ்மீரில் நடைபெறும் பல்வேறு தீவிரவாத தாக்குதலில் இந்த அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில், காஷ்மீரில் செயல்படும் தெஹ்ரீக்- உல்-முஜாகிதீன் அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. தொடர்ந்து பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருவதால், இந்திய மக்களிடையே உள்ள ஒற்றுமை சீர்குலையும் அபாயம் உள்ளது. இவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து நிதி அதிகமாக வருகிறது என்று கூறி இந்த அமைப்புக்கு தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close