காதலர் தினத்திற்கு முதல் நாள் கங்கையில் நீராடுகிறார் அமித் ஷா!

  Newstm Desk   | Last Modified : 06 Feb, 2019 05:45 pm
before-valentines-day-amit-sha-will-participate-in-kumbhmela

உத்தர பிரதேச மாநிலம் அலகாபாத்தில் நடைபெற்று வரும் கும்பமேளாவில், உலகின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த, கோடிக்கணக்கானோர் புனித நீராடி வருகின்றனர். 

மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், தன் அமைச்சரவை சகாக்களுடன், திரிவேணி சங்கமத்தில் மூழ்கி நீராடினார். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரதிநிதிகள் என பலரும், கும்பமேளாவில் பங்கேற்று வருகின்றனர். 

இந்த நிலையில், பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா, கும்பமேளாவில் பங்கேற்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. இம்மாதம், 13ல், அமித் ஷா, திரிவேணி சங்கமத்தில் நீராடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

உத்தர பிரதேசம் வரும் அவர், கட்சியின் மாநில நிர்வாகிகளை சந்தித்து, லோக்சபா தேர்தல் உத்திகள் குறித்து பேச்சு நடத்தவுள்ளார்.

 பின்,  முக்கிய தலைவர்களை தனித் தனியாக சந்திக்கும் அவர், தொகுதி நிலவரம் குறித்தும், தேர்தலுக்காக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசிக்க உள்ளதாக அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close