ஜம்மு காஷ்மீர்: யாசின் மாலிக் கைது

  Newstm Desk   | Last Modified : 06 Feb, 2019 06:34 pm

yasin-malik-detained-by-police-during-protest

ஜம்மு காஷ்மீரின் முக்கிய பிரிவினைவாத தலைவர்களுள் ஒருவரான காஷ்மீர் விடுதலை இயக்கத்தின் தலைவர், முகமது யாசின் மாலிக், ஒரு போராட்டத்தின் போது காஷ்மீர் போலீஸாரால் இன்று கைது செய்யப்பட்டார்.

ஜம்மு காஷ்மீரை சேர்ந்த முக்கிய பிரிவினைவாத கட்சியான ஜம்மு காஷ்மீர் விடுதலை கட்சியின் (JKLF) தலைவர் யாசின் மாலிக். அம்மாநில சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும், என கோரி மாலிக் போராட்டம் நடத்த ஏற்பாடு செய்திருந்தார்.

தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள அபி குஸார் பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்திலிருந்து, பல ஆதரவாளர்களுடன் போராட்டம் நடத்த முயற்சித்தார் மாலிக். அப்போது காவல்துறையினர், மாலிக் தலைமையிலான பேரணியை நிறுத்தி, அவரை பிடித்து வைத்தனர்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close