கும்பமேளாவில் ஒன்று கூடும் மத்திய அமைச்சர்கள்!

  Newstm Desk   | Last Modified : 06 Feb, 2019 06:11 pm
pm-modi-will-soon-meet-all-ministers-at-kumbhmela

உலக பிரசித்தி பெற்ற கும்பமேளா திருவிழாவில், வரும், 18ல் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, திரிவேணி சங்கமத்தில் நீராட உள்ளார். அன்றைய தினம், மத்திய அமைச்சர்களும், மாேடியுடன் சேர்ந்து நீராட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

விரைவில் லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளதால், உத்தர பிரதேசத்திற்கு வரும் மோடி, தேர்தல் பணிகள் குறித்து, பா.ஜ., நிர்வாகிகளுடன் ஆலோசிக்கவும் திட்டமிட்டுள்ளார். அதே சமயம், அன்றைய நாளில், பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும் துவக்கி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன், மத்திய அமைச்சரவை கூட்டத்தை கூட்டவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. எனவே, அலகாபாத் எனப்படும் பிரயாக்ராஜ் வரும் அமைச்சர்கள், பிரதமருடனா கூட்டத்தில் பங்கேற்பார்கள் எனவும் கூறப்படுகிறது. 

இந்த கூட்டத்திற்குப் பின், சில முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என, பா.ஜ., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close