சுற்றுலா பயணியரை கவரும் ‛முகல் கார்டன்’ திறந்தாச்சு!

  விசேஷா   | Last Modified : 06 Feb, 2019 06:40 pm
mughal-garden-opened-for-general-public

தலைநகர் டெல்லியில், ‛ராஷ்ட்ரபதி பவன்’ என அழைக்கப்படும், ஜனாதிபதி மாளிகையின் பின்புறம், மிகப் பெரிய, மிக மிக அழகான மலர்த் தோட்டம் உள்ளது, உங்களில் எத்தனை பேருக்கு தெரியும். 

ஆம், உள்நாட்டினர் மட்டுமின்றி, பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணியரும், காணத்துடிக்கும் இந்த ‛முகல் கார்டன்’ இந்த ஆண்டு பாெதுமக்கள் பார்வைக்காக இன்று திறக்கப்பட்டது. 

ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்படும் இந்த தோட்டத்தை, அடுத்த மாதம் 10ம் தேதி வரை கண்டு ரசிக்கலாம். 

பல ஆயிரக்கணக்கான துாலிப் மலர்கள், கண்கவர் ரோஜாக்கள், சுகந்தம் வீசும் மலர் செடிகள், கொடிகள், பல்லாயிரக்கணக்கான மரங்கள் என, காண்போரை கட்டி இழுக்கும் இந்த தோட்டம், பார்வையாளர்களால், ‛பூலோக சொர்க்கம்’ என்றே அழைக்கப்படுகிறது. 

ஜனாதிபதி மாளிகையின், 35ம் எண் கேட் வழியாக, பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர். தோட்டத்தின் உள்ளேயே, குழந்தைகள், முதியோர், பெண்கள் ஓய்வெடுக்க பிராண்டமான பொது இடம் உள்ளது. அது தவிர, குடி நீர் வசதியும் செய்யப்பட்டுள்ளது. 

எனவே, தோட்டத்தை சுற்றிப்பார்க்க செல்வோர், தண்ணீர் பாட்டில்கள், கேமராக்கள், ரேடியாே, உணவுப் பொருட்கள், கைப்பைகள் போன்றவற்றை எடுத்து செல்ல அனுமதி கிடையாது. 


உலகின் பல நாடுகளில் காணப்படும் ஆயிரக்கணக்கான மலர்கள், இந்த ஒரே தோட்டத்தில் பூத்து குலுங்குவதால், இந்த மாதமும், அடுத்த மாதமும் டெல்லி செல்லும் எவரும், முகல் தோட்டத்தை காணத்தவறாதீர்கள்.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close