‘வந்தே பாரத்’ ரயிலை பி.15இல் தொடங்கி வைக்கிறார் மோடி

  Newstm Desk   | Last Modified : 07 Feb, 2019 10:54 am
pm-modi-to-flag-off-vande-bharat-rail-from-delhi-on-feb-15

நாட்டிலேயே மிக அதிவேகமானதாகக் கருதப்படும் ‘வந்தே பாரத்’ ரயிலை பிரதமர் நரேந்திர மோடி, வரும் 15ம் தேதி தொடங்கி வைக்கிறார். அந்த ரயில் சென்னை பெரம்பூரில் தயாரிக்கப்பட்டதாகும்.

டெல்லியில் இருந்து உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசிக்கு அந்த ரயில் இயக்கப்படவுள்ளது. முதல்முறையாக இஞ்சின் இல்லாமல், தானியங்கி உந்துசக்தி மூலமாக இயக்கப்படும் ரயிலாக வந்தே பாரத் இருக்கும். டெல்லி - மும்பை இடையிலான ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில்தான் இதுவரையிலும் அதி வேகமான ரயிலாக இருந்தது. அதை முறியடிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள வந்தே பாரத் ரயில் மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் செல்லக் கூடியதாகும்.

வந்தே பாரத் ரயில் 16 பெட்டிகளை கொண்டதாகும். வரும் 15ம் தேதி காலை 10 மணியளவில் அதன் தொடக்கவிழா நடைபெறவுள்ளது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close