மறைந்த பிரதமர் வாஜ்பாயின் முழுஉருவப் படம், நாடாளுமன்றத்தின் மத்திய அரங்கில், வரும் 12ம் தேதி திறக்கப்படுகிறது.
குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், வாஜ்பாய் படத்தை திறந்து வைக்கவுள்ளார். துணைக் குடியரசுத்தலைவர் வெங்கய்யா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்கவுள்ளனர். முன்னதாக, நாடாளுமன்றத்தில் வாஜ்பாய் படத்தை திறப்பது தொடர்பாக, மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் தலைமையிலான குழு கடந்த டிசம்பர் மாதம் 18ம் தேதி முடிவெடுத்தது.
மக்களவை துணைத்தலைவர் தம்பிதுரை, காங்கிரஸ் மக்களவைக் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மற்றும் பா.ஜ.க., திரிணமூல் காங்கிரஸ், தெலுங்கு ஆகிய கட்சிகளின் எம்.பி.க்கள் அந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். அப்போது, வாஜ்பாய் படத்தை திறப்பது என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.
மத்தியப் பிரதேச மாநிலம், குவாலியரில் கடந்த 1924ம் ஆண்டில் பிறந்த வாஜ்பாய், நாட்டின் பிரதமராக மூன்று முறை பதவி வகித்துள்ளார். நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது பெற்ற பெருமைக்குரிய வாஜ்பாய், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மறைந்தார்.
newstm.in