ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரம் அமலாக்கத்துறை முன்பு ஆஜர்!

  Newstm Desk   | Last Modified : 07 Feb, 2019 11:31 am

inx-media-money-laundering-case-ed-to-quiz-karti-chidambaram-today

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரம் இன்று விசாரணைக்காக அமலாக்கத்துறை முன்பு ஆஜராகியுள்ளார். 

ஐ.என்.எக்ஸ் மீடியாவுக்கு விதிமுறைகளை மீறி, அந்நிய முதலீடு மேம்பாட்டு வாரியம் அனுமதி அளித்ததில் முறைகேடு நடந்தது தொடர்பாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனான கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. 

இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. தொடர்ந்து, இந்த வழக்கில் ப.சிதம்பரத்திற்கும் சம்மன் அனுப்பப்பட்டு அமலாக்கத்துறை அவரிடம் விசாரணை நடத்தியது. இருவரையும் அமலாக்கத்துறை கைது செய்ய தடை விதிக்கப்பட்டு, அந்த தடையை டெல்லி உயர் நீதிமன்றம் தொடர்ந்து நீட்டித்தும் வருகிறது. ப.சிதம்பரத்தின் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐ நடவடிக்கை எடுத்து வருகிறது. 

இந்த நிலையில் தான் வெளிநாடு செல்ல அனுமதி வேண்டும் என்று கார்த்தி சிதம்பரம் தொடர்ந்த வழக்கில், பிப்ரவரி 20ஆம் தேதி முதல் 28ம் தேதி வரை அவர் வெளிநாடு செல்ல நீதிமன்றம் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. 

பின்னர், இது தொடர்பான வழக்கிலே, கார்த்தி சிதம்பரம் வழக்கின் விசாரணைக்கு முறையாக ஆஜராவதில்லை என அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்திடம் தெரிவிக்கவே வருகிற மார்ச் 5,6,7மற்றும் 12 ஆகிய தேதிகளில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆனால், அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதால் கார்த்தி சிதம்பரம் இன்று விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். 

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close