பா.ஜ.க. மீண்டும் ஜெயிச்சா எங்ககிட்ட மறுபடியும் மோதுவாங்க - கெஜ்ரிவால்!!

  Newstm Desk   | Last Modified : 07 Feb, 2019 12:48 pm
if-bjp-elected-again-they-will-continue-to-clash-with-aap-kejriwal

நாடாளுமன்றத் தேர்தலில், டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் பா.ஜ.க. மீண்டும் வெற்றி பெறுமானால், எங்கள் அரசுடன் அவர்கள் மறுபடியும் மோதலில் ஈடுபடுவார்கள் என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

கடந்த முறை நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், டெல்லியில் உள்ள 7 தொகுதிகளையும் பா.ஜ.க. கைப்பற்றியது. அதன் பின்னர் டெல்லியில் ஆட்சிக்கு வந்த ஆம் ஆத்மி அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே மோதல் போக்கு இருப்பதாகக் கருதப்பட்டது. குறிப்பாக, பல்வேறு விவகாரங்களில் மத்திய அரசை கெஜ்ரிவால் குற்றம்சாட்டி வந்தார். இந்நிலையில், டெல்லியில் வளர்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கி வைப்பதற்கான விழாவில் கலந்து கொண்ட அவர், பொதுமக்கள் மத்தியில் உரையாற்றுகையில், “நீங்கள் பா.ஜ.க.வை அனைத்து தொகுதிகளிலும் மீண்டும் வெற்றி பெறச் செய்தால், அவர்கள் எங்களுடன் மறுபடியும் மோதலில் ஈடுபடுவார்கள். ஆம் ஆத்மி அரசின் செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்துவார்கள்’’ என்று தெரிவித்தார்.

கடந்த நான்கரை ஆண்டுகளில் டெல்லி மக்களின் நலனுக்காக பா.ஜ.க. எம்.பி.க்கள் எதையுமே செய்யவில்லை என்றும், ஆனால், ஆம் ஆத்மி அரசுக்கு தடைகளை ஏற்படுத்தியதாகவும் கெஜ்ரிவால் குற்றம்சாட்டினார். நாடாளுமன்றத் தேர்தலில், டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தால், அவர்கள் மாநில அரசுடன் இணக்கமாக செயல்படுவார்கள் என்றும் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close