வெறும் ரூ.36,000 செலவில் மகன் திருமணத்தை நடத்தும் ஐஏஎஸ் அதிகாரி!

  Newstm Desk   | Last Modified : 07 Feb, 2019 12:13 pm
andhra-ias-to-spend-only-rs-36k-on-son-s-marriage

தற்போதைய காலகட்டத்தில் திருமணம் என்றாலே ஊரே வியக்கும் அளவுக்கு நடத்த வேண்டும் என்பது தான் அனைத்து பெற்றோர்களின் விருப்பமாக இருக்கும். நடுத்தர குடும்பத்தினர் கூட லட்சக்கணக்கில் கடன் வாங்கி தங்களது பிள்ளைகளின் திருமணத்தை நடத்துவதை நாம் அனைத்து இடங்களிலும் கண்கூடாக பார்க்க முடியும். வசதி படைத்தவர்கள் என்றால் மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவுக்கு தங்கள் மகள்/மகனின் திருமணத்தை திருவிழா போல் பிரமாண்டமாக நடத்துவர். 

இப்படி இருக்கும் ஒரு சமுதாயத்தில் ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் தனது மகன் திருமணத்தை வெறும் ரூ.38,000 செலவில் நடத்துகிறார் என்றால் ஆச்சரியமாகத் தானே இருக்கிறது. ஆமாங்க.. உண்மை தான். 

தற்போது ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பெருநகர பகுதி மேம்பாட்டு ஆணையத்தின் (VMRDA) கமிஷனர் பட்னாலா பசந்த் குமார், 2012ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக பதவி உயர்வு பெற்றவர். முன்னதாக அம்மாநில கவர்னர் நரசிம்மனுக்கு இணை செயலராக இருந்துள்ளார். 

இவரது மகனுக்கு வருகிற பிப்ரவரி 10ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இந்த திருமணத்திற்கான செலவுத் தொகை வெறும் ரூ.36,000. அதுவும் மணமகள் மற்றும் மணமகன் குடும்பத்தினர் தலா ரூ.18,000 செலவு செய்கின்றனர். 

ஐஏஎஸ் அதிகாரி மகன் திருமண விழாவிற்கு சிறப்பு அழைப்பாளர் ஆந்திரா மற்றும் தெலுங்கானா கவர்னர் நரசிம்மன். 

முன்னதாக கடந்த 2017ம் ஆண்டு பசந்த் குமார் தனது மகள் திருமணத்தை 16,100 ரூபாயில் நடத்தியது குறிப்பிடத்தக்கது. 

இவரை பற்றி அப்பகுதி மக்களிடம் கேட்டால் மிகவும் எளிமையானவர் என்று கூறுகின்றனர். மேலும், அப்பகுதி மக்களுக்கு இவர் ஒரு எடுத்துக்காட்டாக வாழ்கிறார் என்றும் கூறப்படுகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close