ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் கடும் பனிப்பொழிவு காரணமாக இரண்டாம் நாளாக விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஸ்ரீநகரில் உறை பனி கொட்டி வருகிறது. இதனால், ஸ்ரீநகருக்கு வரவிருந்த 15 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. விமானங்களை தரையிறக்குவது அல்லது பறக்கச் செய்வது என இரண்டு பணிகளுமே தற்போதைக்கு சாத்தியமற்றதாக உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேபோன்று, பனிப்பொழிவு காரணமாக சாலை போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஜம்மு-ஸ்ரீநகர் இடையிலான தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளதால், ஏராளமான வாகனங்கள் பாரமுல்லாவில் அணிவகுத்து நிற்கின்றன. சில இடங்களில் கடுமையான மழை பெய்து வருவதால் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.
newstm.in