வங்கி வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி...ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைப்பு!

  Newstm Desk   | Last Modified : 07 Feb, 2019 12:24 pm
repo-rate-reduced-by-0-25-rbi

வங்கிகளுக்கு அளிக்கும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் (ரெப்போ)  6.5 சதவீதத்திலிருந்து 6.25 சதவீதமாக குறைக்கப்படுவதாக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) இன்று அறிவித்துள்ளது.

அதாவது, ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்படுவதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் இன்று வெளியிட்டுள்ள 2018-19-ஆம் ஆண்டுக்கான ரிசர்வ் வங்கியின் ஆறாவது கொள்கை அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, வாடிக்கையாளர்களின் பல்வேறு கடன்களுக்கான வட்டி விகிதம் கணிசமாக குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close